#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"நான் காதல் திருமணம் தான் செய்வேன்.! லாஸ்லியாவின் கண்ணீர் பேட்டி!
விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் லோஸ்லியா. இலங்கையைச் சேர்ந்த இவர் அங்குள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த லொஸ்லியா, பின்னர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார்.
அதன் பிறகு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், லொஸ்லியா பிரெண்ட்ஷிப் , கூகுல் கட்டப்பா ஆகிய தமிழ் படங்களிலில் நடித்தார். ஆனால் அப்படங்கள் பெரியளவில் கவனத்தைக் கவரவில்லை. தொடர்ந்து லொஸ்லியா பட வாய்ப்புகளுக்காக முயற்சித்து வருகிறார்.
இந்நிலையில், தனது பர்சனல் வாழ்க்கை குறித்து ஒரு பேட்டியில் லொஸ்லியா கூறியுள்ளார். அதில், "நான் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது தான் என் அப்பாவை கடைசியாக பார்த்தேன். நான் வெளியில் வந்த போது அப்பா கனடா சென்றுவிட்டார்.
அதன்பிறகு அப்பா இறந்து விட்டார். அப்பா இறந்து இரண்டு ஆண்டுகளாகியும் என்னால் அதை இன்னும் கடந்து வர முடியவில்லை. நான் நிறைய பேரை நம்பி ஏமாந்திருக்கிறேன். அதெல்லாம் ஒரு பாடம். நான் கண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்துகொள்வேன்" என்று லோஸ்லியா கண்ணீர் மல்க கூறியுள்ளார்.