#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிக்பாஸ் லாஸ்லியாவா இது.. ஆளே இப்படி மாறிட்டாங்களே.?
சின்னத்திரையில் ஒளிபரப்பப்பட்ட பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் லாஸ்லியா. இலங்கை தமிழ் பெண்ணான லாஸ்லியாவிற்க்கு தமிழ் ரசிகர்களிடையே பலத்த ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிக்பாஸ் போட்டியின் போது சக போட்டியாளரான கவின் என்பவரை காதலித்தார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதன்பின்பு கவின் வேறு ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இது போன்ற நிலையில், தமிழில் ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா போன்ற திரைப்படங்கள். ஆனால் படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்பதால் லாஸ்லியாவிற்கு பட வாய்ப்புகள் குறைந்து வருகின்றன.
இதனால் தற்போது தனது ஃபோட்டோ ஷூட் செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் குடும்ப குத்து விளக்கு போல் தாவணியணிந்து புகைப்படம் எடுத்து அதனை பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.