மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொழுகொழுவென இருந்த நான் ஒல்லியானதற்கு காரணம் இதுதான்! ரகசியத்தை போட்டுடைத்த லாஸ்லியா!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த செய்திவாசிப்பாளரான அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவானது.
பின்னர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் லாஸ்லியாவிற்கு பட வாய்ப்புகள் வந்தது. அவர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து பிரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து லாஸ்லியா தற்போது பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பா என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் அவரிடம் உடல் எடை குறைத்தது குறித்து கேட்கையில் அவர், எனக்கு சில உடல்நல பிரச்சினைகள் இருந்ததால் உடல் எடையைக் குறைக்க வேண்டியதாயிற்று. மேலும் நான் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவதற்கு முன்பு ஒல்லியாகதான் இருந்தேன். பிக்பாஸுக்கு வந்த பிறகே சற்று உடல் எடை அதிகரித்தேன். மேலும் ஸ்கிரீனில் நான் பெரிதாக தோன்றுவது போல இருந்தது. அதனால் உடல் எடையை குறைத்துள்ளேன் என கூறியுள்ளார்.