மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னம்மா டிரெஸ் இது.! பிரபல நடிகரின் திருமண வரவேற்பு விழாவில் செம கிளாமராக லாஸ்லியா.! சொக்கிய ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் தற்போது இளைஞர்களின் கனவுகன்னியாக வலம் வரும் நடிகைகளில் ஒருவர் லாஸ்லியா. அவர் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்துள்ளார். லாஸ்லியா விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பட்டாம்பூச்சி போல சுற்றி திறந்து, தனது கலகலப்பான பேச்சால், சிரிப்பால் தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார். அவருக்கு பெரும் ஆர்மியும் உருவானது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் பிரபலமடைந்ததை தொடர்ந்து அவருக்கு தமிழ் சினிமாவில் படவாய்ப்புகளும் வரத் துவங்கியது. லாஸ்லியா ஹர்பஜன் சிங், சதீஷ் உடன் இணைந்து பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்தார். பின்னர் பிக்பாஸ் தர்சனுக்கு ஜோடியாக கூகுள் குட்டப்பன் என்ற படத்திலும் நடித்துள்ளார். பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் வராத நிலையில் அவர் அவ்வப்போது கிளாமராக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது கருப்பு நிற கிளாமரான உடையில் லாஸ்லியா இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதாவது அவர், அந்த உடை அணிந்து பிக்பாஸ் பிரபலமும், நடிகருமான ஹரிஷ் கல்யாணின் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்றுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் என்னம்மா டிரஸ் இது.! ஏன் இப்படி இறங்கிடீங்க என ஷாக்காகியுள்ளனர்.