திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நடிகை மீனாவின் கணவர் உயிரிழக்க இதுதான் காரணம்.! அமைச்சர் மா.சுப்பிரமணியம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின் ஹீரோயினாக அவதாரமெடுத்து மக்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகை மீனா. அவர் ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார், விஜயகாந்த், பிரபு, அஜித் என பல பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை மீனா மலையாளம், தெலுங்கு,கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு கணினி பொறியாளரான வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இவர் தெறி படத்தில் விஜய்யின் மகளாக நடித்து பிரபலமடைந்தார். இந்த நிலையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கடுமையான நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு,அவர் அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார்.
ஆனால் தொற்று தீவிரமடைந்த நிலையில் வித்யாசாகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று வித்யாசாகர் உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னரில் முகக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைபெற்றது. அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், நடிகை மீனாவின் கணவர் இருதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்த நிலையில் கடந்த 6 மாதமாக உடல்நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். உறுப்பு தானம் பெற முதலமைச்சர் அறிவுறுத்தலோடு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் துரதிருஷ்டவசமாக அவர் உயிரிழந்ததாக கூறியுள்ளார்.