திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மலேசியாவில் இந்த மாதம் துவங்குகிறது சிம்புவின் மாநாடு! காத்திருக்கும் ரசிகர்கள்!
நடிகர் சிம்பு 'வந்தா ராஜாவாகத்தான் வருவேன்' படத்திற்கு பிறகு மாநாடு என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளார். வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை, வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன், எடிட்டராக பிரவீன் கே.எல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் டைட்டில் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியானது.
இந்தப் படத்துக்காக தனது உடல் எடையைக் குறைத்துள்ளார் நடிகர் சிம்பு. மே மாதம் படப்பிடிப்பு துவங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் 25ஆம் தேதி மலேசியாவில் பாடல் காட்சியுடன் ’மாநாடு’ படத்தின் ஷூட்டிங் துவங்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்தப் படத்தில் இயக்குநர் பாரதிராஜா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. பின்னர் இதுகுறித்து விளக்கமளித்த படக்குழு, மாநாடு படத்தில் பாரதிராஜா நடிப்பது உண்மைதான். ஆனால் வில்லன் கேரக்டர் அல்ல என்று கூறியுள்ளது.
முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தில் இந்தப்படம் உருவாகிறது. சிம்பு இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாக இருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த படத்தினை காண சிம்புவின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.