53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
சாக்லேட் பாயாக இளம்பெண்களின் தூக்கத்தை கெடுத்த நடிகர் மாதவன் இவ்வளவு பெரிய நடிகருக்கு அப்பாவா? ஷாக்கான ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் அலைப்பாயுதே. இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சாக்லேட் ஹீரோவாக மாறி பெண்களின் கனவுநாயகனாக வலம் வந்தவர் நடிகர் மாதவன். அதனை தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்த அவருக்கெனவே ஏராளமான பெண் ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் அப்பொழுதே அவருக்கு திருமணமாகிவிட்டது என கேள்விபட்டதும் பெண் ரசிகர்கள் பெரும் வருத்தத்திற்கு உள்ளானர். மேலும் அவருக்கு தற்போது தோலுக்கு மேல் வளர்ந்த பெரிய மகன் உள்ளார்.
மேலும் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளிவந்த படம் இறுதி சுற்று. அப்படத்தில் தலைமுடி, தாடி எல்லாம் நரைத்த பின்பும் அவரது சாக்லேட் ஹீரோ தன்மை மட்டும் குறையாமல் பெண்களை கட்டி இழுத்தது.இவ்வாறு தற்போதும் லேட்டஸ்ட் ஹீரோக்களுக்கு போட்டிக்கொடுக்கும் வகையில் மாதவன் இருக்கும் நிலையில் அவர் தெலுங்கில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் வருண் தேஜிற்கு அப்பாவாக மாதவன் நடிக்கின்றார் என்ற செய்தி பரவி வந்தது.
இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பலர் இது உண்மையா என கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இதனை கண்ட மாதவன் இது முற்றிலும் பொய், நான் இன்னும் சிறிய பையன்தான் என ஜாலியாக கமெண்ட் செய்துள்ளார். இதன் பின்னரே ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
Totally fake bro. 🙈🙈I am still a kid man .. 🤪🤪🤪 https://t.co/plGzwCRsFf
— Ranganathan Madhavan (@ActorMadhavan) November 18, 2019