மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"அடி தூள்..." பிரபல விஞ்ஞானி 'ஜி டி நாயுடு' வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க போகும் நடிகர் இவர்தானா.? உற்சாகத்தில் ரசிகர்கள்.!
இந்திய சினிமாவில் தற்காலங்களில் வாழ்க்கையில் சாதித்தவர்கள் விஞ்ஞானிகள் மற்றும் விளையாட்டு வீரர்களை பற்றிய பயோபிக் திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்திருக்கிறது. சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்று படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.
அதனைத் தொடர்ந்து தமிழில் சூர்யா நடித்த சூரரை போற்று திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று தேசிய விருதையும் வென்றது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மாதவன் நடித்த ராக்கெட்டரி என்ற திரைப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தத் திரைப்படத்தில் விஞ்ஞானி நம்பி நாராயணனாக நடித்திருந்தார் மாதவன்.
தனது சினிமா வாழ்க்கையின் ஆரம்ப காலகட்டங்களில் சாக்லேட் பாயாக வளர்ந்து வந்த மாதவன் பின்னர் வித்தியாசமான அக்கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். இறுதிச்சுற்று திரைப்படத்தில் இவர் நடித்த கோச்சர் கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் மீண்டும் ஒரு பட அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இந்தியாவைச் சார்ந்த மிகச்சிறந்த விஞ்ஞானியான ஜிடி நாயுடு அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகயிருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் ஜிடி நாயுடுவாக நடிக்க இருக்கிறார் மாதவன். இந்தத் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.