மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆறு மாதமாச்சு.. முதன்முதலாக தனது கியூட் மகனின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் மகத்! குவியும் லைக்ஸ்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் மகத். தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் வெளிவந்த வல்லவன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான அவர் அதனைத் தொடர்ந்து காளை, மங்காத்தா, ஜில்லா போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் ஹீரோவாகவும் கெட்டவனு பேர் எடுத்த நல்லவன் டா என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் மகத் பிரபல மாடல் அழகியான பிராச்சி மிஸ்ராவை காதலித்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. மகத் தனது மகனுக்கு அதியமான் என பெயரிட்டுள்ளார்.
Hello everyone that’s me little Adhu! 👶🏻
— Mahat Raghavendra (@MahatOfficial) December 13, 2021
& I’m six months old 🤩#AdhiyamanRaghavendra pic.twitter.com/KfWN29KDMp
இந்த நிலையில் குழந்தை பிறந்து ஆறு மாதமாகும் நிலையில் முதன்முதலாக மகத் தனது மகனை உலகிற்கு அறிமுகம் செய்து அவரது புகைப்படத்தை தன் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் இணையத்தில் பெருமளவில் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.