மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. ஒரே ஜாலிதான்! தன் நண்பன் சிம்புவின் பிறந்த நாளன்று, மகத் வெளியிட்ட சூப்பர் வீடியோவை பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகராக, லிட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் சிலம்பரசன் என்கிற சிம்பு. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் அண்மையில் வெளிவந்த மாநாடு படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.
அந்தப் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. வசூல் சாதனையும் படைத்தது. அதனைத் தொடர்ந்து சிம்பு கைவசம் தற்போது வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் என பல படங்கள் உள்ளது. அவற்றின் படப்பிடிப்புகளில் சிம்பு தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் சிம்பு நேற்று தன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பர் நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான மகத். இவர் சிம்புவுடன் இணைந்து சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தனது நண்பர் சிம்புவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி மகத் தனது இன்ஸ்டாகிராமில், கலகலப்பாக இருவரும் கார் ரேஸ் கேம் விளையாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது. அதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் சிம்புவிற்கு வாழ்த்து கூறியுள்ளனர்.