மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது.. கர்ப்பமாக உள்ளாரா மகாலட்சுமி.! தயாரிப்பாளர் ரவீந்தர் வெளியிட்ட புகைப்படத்தால் குழம்பிபோன நெட்டிசன்கள்!!
சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஜோடியாக இருந்து வருபவர்கள் மகாலட்சுமி மற்றும் ரவீந்தர். பிரபல சேனலில் விஜேவாக அறிமுகமாகி பின்னர் நடிகையாக களமிறங்கி ஏராளமான தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் மகாலட்சுமி. அவர் தற்போது சன் தொலைக்காட்சியில் அன்பே வா சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்துகொண்டார். இது அவருக்கு இரண்டாவது திருமணமாகும். மகாலட்சுமி ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில் விவாகரத்து பெற்றவர். இவர்களது திருமணம் சமூக வலைத்தளங்களில் பேசுப்பொருளானது.
இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரவீந்தர் அவ்வப்போது தனது மனைவி மகாலட்சுமியுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்வார். அவர் அண்மையில் மகாலட்சுமியுடன் ஹோட்டல் ஒன்றில் சாப்பிடும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் மகாலட்சுமியின் வயிறு பெரிதாக இருப்பதை கண்ட நெட்டிசன்கள் மகாலட்சுமி கர்ப்பமாக இருக்கிறாரா? என கேள்வியெழுப்பியுள்ளனர் ஆனால் அதற்கு அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை.