திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
படத்தில் நடிக்க அழைத்து, ஆபாச தளத்திற்கு வீடியோ விற்பனை செய்த கும்பல்; 18 வயது சிறுமி அதிர்ச்சி புகார்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் பகுதியைச் சார்ந்த நபர்கள் 18 வயது சிறுமியிடம் நடிக்க வாய்ப்பு வழங்குவதாக கூறி இருக்கின்றனர். இதனை நம்பிய சிறுமியும் தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக எண்ணி, மூவர் அழைத்த அலுவலகத்திற்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் சிறுமியை படம்பிடித்து வைத்துக்கொண்ட கும்பல் அதனை ஆபாச இணையதளத்திற்கு விற்பனை செய்ததாக தெரியவருகிறது. இந்த தகவலையறிந்த சிறுமி அங்குள்ள காவல்நிலையத்தில் புகாரளிக்கவே, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மூவர் கும்பலை கைது செய்தனர்.
அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மேலும் இவர்களால் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்?, இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோக்களின் எண்ணிக்கை எவ்வளவு? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.