மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. இவரையும் விட்டுவைக்கலையா! நடிகர் மகேஷ்பாவு வெளியிட்ட ஷாக் தகவல்! வருத்தத்தில் ரசிகர்கள்!!
கடந்த 2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் இன்று வரை குறையாமல் ஆட்டிபடைத்து வருகிறது. சாமானிய மக்கள் முதல் திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இந்த கொரோனா தொற்றால் பாதிக்கபட்டனர். மேலும் பலரும் இந்த கொடிய தொற்றால் உயிரிந்த துயரமும் நேர்ந்தது.
இந்நிலையில் தற்போது வரை கொரோனோ பரவலைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனா வராமல் பாதுகாத்துக்கொள்ள மக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இடையில் சற்று குறைந்திருந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் கோரதாண்டவமாட துவங்கியுள்ளது.
— Mahesh Babu (@urstrulyMahesh) January 6, 2022
தற்போது தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தனக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி தான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தவறாமல் பரிசோதனை செய்துகொள்ளவும், தடுப்பூசி போடாதவர்கள் உடனே தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.