மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக்பாஸ் சீசன் 6ல் அவர்தான் வெற்றியாளர்! மகேஸ்வரி ஓபன் டாக்! என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் 6வது வாரம் சென்று கொண்டுள்ளது. இந்த சீசனில் துவக்கத்தில் ஜிபி முத்து, அசீம், அசல் கோளார், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ராம், பாடகர் ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மகேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, சரவணன் மீனாட்சி புகழ் ரக்சிதா, மணிகண்டன், சாந்தி மாஸ்டர் , விக்ரமன், குயின்ஸி நிவாஷினி மற்றும் ஷிவின் என 20 பேர் என்ட்ரி கொடுத்தனர்.
அவர்களைத் தொடர்ந்து வைல்டு கார்டு என்ட்ரியாக மைனா நந்தினி பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார். ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் எலிமினேஷனும் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து, சாந்தி மாஸ்டர் , அசல் கோளாறு,ஷெரினா மற்றும் கடந்த வாரம் மகேஸ்வரி என 5 பேர் வெளியேறியுள்ளனர்.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட்டாகி வெளியே சென்ற மகேஸ்வரி பேட்டிகளும் கொடுத்து வருகிறார். அவ்வாறு அவர் அளித்த பேட்டி ஒன்றில், விக்ரமன் நிச்சயமாக நூறு சதவீதம் இறுதி வரை வருவார். ஏனெனில் தனலட்சுமி மற்றும் அசீம் ஆகியோரிடம் இல்லாத ஒன்று விக்ரமிடம் உள்ளது. அது சரியான நிலைப்பாடும் அமைதியும்தான். விக்ரமன் கண்டிப்பாக பலமான போட்டியாளர் என கூறியுள்ளார்.