மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குழந்தை பிறந்து இன்னும் ஒருமாதம் கூட முடியலை.. அதற்குள் மைனா நந்தினி என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா! ஷாக்கான ரசிகர்கள்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் மைனாவாக நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் மைனா நந்தினி. அதனைத் தொடர்ந்து அவர் ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்துகொண்டுள்ளார்.
அதனை தொடர்ந்து நந்தினி வெள்ளித்திரையிலும் வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ரோமியோ ஜூலியட், நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் கடந்த ஆண்டு நடிகரும், நடன இயக்குநருமான யோகேஷ்வரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். யோகேஸ்வரன் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா மற்றும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நாயகி தொடரில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இந்த தம்பதியினருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்த தகவலை யோகேஸ்வரன் உற்சாகத்துடன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார்.இந்த நிலையில் குழந்தை பிறந்து ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில் மைனா நந்தினி மீண்டும் சூட்டிங்கில் இணைந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் நந்தினி சீரியலில் நடிக்கிறாரா அல்லது ஏதேனும் ஷோக்களில் நடுவராக உள்ளாரா என ரசிகர்கள் பெரும் ஆர்வத்தில் உள்ளனர்.