திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மக்கள் செல்வனின் 50வது பட அப்டேட்.! மகாராஜாவாக மாறும் விஜய் சேதுபதி... வில்லனாகும் பாலிவுட் இயக்குனர்.!
தமிழ் சினிமாவில் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக நடித்துக் கொண்டிருந்த விஜய் சேதுபதி பீட்சா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து வெளியான சூது கவ்வும்,இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் போன்ற தொடர்படங்களின் வெற்றியால் முன்னணி நடிகராக உயர்ந்தார்.
அடுத்தடுத்த படங்களின் வெற்றி இவரை மக்கள் செல்வனாக ரசிகர்களுக்கு மத்தியில் உயர்த்தியது. தற்போது வில்லன் புரட்சித்தலை நடிகர் என பல பரிணாமங்களின் நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இவர் வில்லனாக நடித்த மாஸ்டர் மற்றும் விக்ரம் திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் திரைப்படத்திலும் வில்லனாக மிரட்டி இருக்கிறார் விஜய் சேதுபதி. இந்தத் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இவரது ஐம்பதாவது திரைப்படத்தினை பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பின்படி விஜய் சேதுபதி குரங்கு பொம்மை திரைப்படத்தை இயக்கிய நித்திரன் சுவாமிநாதன் உடன் தனது ஐம்பதாவது படத்தில் இணைகிறார். அரசியல் கதைகளம் கொண்ட ஆக்சன் திரைப்படமாக உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தில் சதுரங்க வேட்டை புகழ் நட்டியும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க உள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்தில் பாலிவுட் இயக்குனரான அனுராக் காஷ்யப் விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவான இமைக்கா நொடிகள் திரைப்படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். பேஸன் ஸ்டுடியோஸ், திங் ஸ்டுடியோஸ் மற்றும் ரூட் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் மம்தா மோகன் தாஸ் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.