திடீர் மாரடைப்பால் பிரபல நடிகர் காலமானார்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!



malaiyala-actor-kunthara-jani-passed-away

பழம்பெரும் மலையாள நடிகர் குந்தரா ஜானி மாரடைப்பு காரணமாக காலமானார். பிரபல பழம்பெரும் மலையாள நடிகர் 71 வயது நிறைந்த குந்தரா ஜானி. இவர் 1979 ஆம் ஆண்டு நித்யா வசந்தம் என்ற படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். தொடர்ந்து அவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் பெரும்பாலும் வில்லன் வேடங்களிலும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். குந்தரா ஜானி கடைசியாக 2022 ஆம் ஆண்டு மேப்படியான் என்ற படத்தில் நடித்திருந்தார். இவரது மனைவி ஸ்டெல்லா. கொல்லம் பகுதியில் வசித்து வந்த நடிகர் குந்தரா ஜானிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

kunthara jani

உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், சிகிச்சை பலனின்றி நடிகர் குந்தரா ஜானி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவால் ரசிகர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.