மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொரோனா ஊரடங்கு! வேலையில்லாமல் மீன் வியாபாரியாக மாறிய பிரபல நடிகர்! செம ஷாக்கில் ரசிகர்கள்!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி கோரத்தாண்டவமாடி வருகிறது. இந்நிலையில் இத்தகைய கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பலரும் வேலையின்றி வீட்டில் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பொருளாதாரமின்றி பெருமளவில் தவித்து வரும் நடிகர்கள் உள்ளிட்ட பலரும் வருமானத்திற்காக பல்வேறு தொழில்களை செய்து வருகின்றனர்.
அதன்படி கழநோல் கனவு, ஆதாமின்டே மகன், புதிய தீரங்கள், உஷ்தக் ஓட்டல், வர்ஷம்,பிரேமம் உள்பட பல மலையாள படங்களில் நடித்துள்ள மலையாள நடிகரான வினோத் கோவுர் தற்போது மீன் வியாபாரியாக மாறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கொரனோ அச்சுறுத்தலால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு திரையுலகம் முடங்கி வேலையில்லாமல் இருக்கிறேன். இந்நிலையில் வருமானத்திற்காக நண்பர்களின் ஆலோசனையின் பெயரில் தற்போது மீன் கடை திறந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.