மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விமான பயணத்தில் பிரபல மலையாள நடிகைக்கு பாலியல் தொல்லை: போதையில் பயணி துணிகரம்.. நடிகை புகார்.!
மலையாளத் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக இருந்து வருபவர் திவ்யா பிரபா. இவர் நேற்று ஏர் இந்திய விமானத்தில் மும்பையில் இருந்து கொச்சி வந்தார்.
அப்போது, விமானத்தில் இவரின் இருக்கைக்கு அருகே இருந்தவர் தகாத முறையில் நடந்துகொள்ள, அதிர்ச்சியடைந்த நடிகை விமான பணிக்குழுவிடம் தெரிவித்து இருக்கிறார்.
அவர்கள் சம்பந்தப்பட்ட நபரை வேறொரு இடத்தில் அமரவைத்து இருக்கின்றனர். மேற்படி எந்த விதமான நடவடிக்கையும் இல்லை. மதுபோதையில் இருந்த நபர், தொடர்ந்து நடிகைக்கு தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ந்துபோன நடிகை, விமானம் கொச்சிக்கு வந்ததும் தனது உதவியாளர் உதவியுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
அதில், தான் ஒருவர் மதுபோதையில் பாலியல் தொல்லை அளிப்பதாக கூறியும், விமான பணியாளர்கள் அவரின் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க முன்வராவோ, உதவி செய்யவோ தயாராக இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.