மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
D43 படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாகபோவது இந்த நடிகையா! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு! உற்சாகத்தில் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தனுஷ். அதனை தொடர்ந்து அவர் அடுத்தடுத்ததாக ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக உள்ளார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும் நடிகர் தனுஷ் கைவசம் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ஜகமே தந்திரம், மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் போன்ற படங்கள் உள்ளன. மேலும் பாலிவுட்டில் அத்ரங்கி ரே என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
We are very happy to welcome the gorgeous & talented @MalavikaM_ to our team of #D43 💥
— Sathya Jyothi Films (@SathyaJyothi_) October 31, 2020
#MalavikaJoinsD43 @dhanushkraja @karthicknaren_M @gvprakash pic.twitter.com/17KjlYo1OW
இவைகளை தொடர்ந்து தனுஷ் துருவங்கள் பதினாறு என்ற படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இது தனுஷின் 43வது படமாகும். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த நிலையில் இதன் ஆரம்பகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கஉள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.