திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஏன் இவ்ளோ கவர்ச்சி?? ரசிகர்களின் கேள்விக்கு செம கூலாக பதிலளித்த நடிகை மாளவிகா மோகனன்!!
தமிழ் சினிமாவில் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். தொடர்ந்து அவர் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து நடிகர் தனுஷின் மாறன் திரைப்படத்தில் நடித்த அவர் தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
கோலார் தங்க வயலை மையமாக கொண்டு உருவாகும் இந்த படத்திற்காக நடிகை மாளவிகா மோகனன் ஏராளமான உடற்பயிற்சிகள் மற்றும் சிலம்பப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். மேலும் அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார்.
Coz I like to. Simple :) https://t.co/vUpybn0MRA
— Malavika Mohanan (@MalavikaM_) April 29, 2024
அப்பொழுது ரசிகர் ஒருவர், ஏன் எப்பொழுதும் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்துகிறீர்கள்? என கேட்டுள்ளார். அதற்கு அவர், ஏனென்றால் எனக்கு அது பிடித்திருக்கிறது என்று கூறியுள்ளார்.
I want to play a Gangster 😎😎
— Malavika Mohanan (@MalavikaM_) April 29, 2024
Will be interesting to see a woman play a cool gangster, no? 🔫
And now that I’m trained in action sequences as well, will be fun to explore that side more https://t.co/J9nJuKjfyb
மேலும் எந்த கதாபாத்திரத்தில் நடிப்பது உங்கள் கனவு? என்ற கேள்விக்கு, எனக்கு கேங்ஸ்டராக நடிக்க ஆசை.ஒரு பெண் கூலான கேங்ஸ்டராக நடிப்பதை பார்க்க ஆர்வமாக இருக்கும் இல்லையா? தற்போது நான் ஆக்சன் சீன்களுக்கு பயிற்சி பெற்றுள்ளதால், அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஜாலியாகவும் இருக்கும் என்று கூறியுள்ளார்.