திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அட.. இதைத்தான் சொன்னேன்.! லேடி சூப்பர்ஸ்டார் சர்ச்சை.! ஒருவழியாக முற்றுப்புள்ளி வைத்த மாளவிகா மோகனன்!!
தமிழ் சினிமாவில் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் மலையாள நடிகை மாளவிகா மோகனன். அதனைத் தொடர்ந்து அவர் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். பின்னர் தனுசுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்தார். மாளவிகா மோகனன் தற்போது மலையாளத்தில் அல்வின் ஹென்றி இயக்கத்தில் கிறிஸ்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பிப்ரவரி 17ஆம் தேதி ரிலீசாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் கலந்து கொண்டு வரும் மாளவிகா மோகனன் பேட்டி ஒன்றில், லேடி சூப்பர் ஸ்டார் என அழைப்பது குறித்து கருத்து கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது அவர் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதில் எனக்கு விருப்பமில்லை. நடிகர்களை போல நடிகைகளையும் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கவேண்டும். தீபிகா படுகோனே, ஆலியா பட் ஆகியோர் சூப்பர் ஸ்டார்கள்தான் என கூறியிருந்தார். இந்த நிலையில் அவர் நயன்தாராவை சீண்டிதான் இவ்வாறு கருத்து கூறியதாக அவரது ரசிகர்கள் கொந்தளித்தனர்.
My comment was about a term that is used to describe female actors & not about any specific actor. I really respect & admire Nayanthara, and as a senior really look upto her incredible journey. Can people please calm down. Especially the tabloid journos.
— Christy (@MalavikaM_) February 12, 2023
Only ♥️ to Miss N https://t.co/QyrfqOoJWU
தொடர்ந்து அதற்கு விளக்கமளித்து மாளவிகா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், நான் தனியாக எந்த ஒரு நடிகையையும் குறிப்பிட்டு அவ்வாறு கூறவில்லை. பெண் நடிகைகள் குறித்த எனது கருத்தையே நான் தெரிவித்தேன். நான் உண்மையாகவே நடிகை நயன்தாராவை மிகவும் மதிக்கிறேன். மேலும் ஒரு மூத்த நடிகையாக, நம்பிக்கையூட்டும் அவரது திரையுலக பயணத்தை கண்டு வியந்துள்ளேன். தயவுசெய்து மக்கள் அனைவரும் அமைதியாக இருங்கள் என கூறியுள்ளார்.