மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பரபரப்பு.. பிரபல நடிகர் காரில் சடலமாக மீட்பு.! காவல்துறை விசாரணை.?
மலையாள திரையுலைகில் அறியப்படும் நடிகராக இருந்து வருபவர் வினோத் தாமஸ். 47 வயதாகும் இவர் அயப்பனும் கோஷியும், ஒருமுறை வந்து பார்த்தாயா, ஹேப்பி வெட்டிங் போன்ற ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இது போன்ற நிலையில், கேரளாவில் கோட்டையம்பாடி எனும் பகுதியிலுள்ள பிரபல தனியார் மதுபான விடுதி அருகே நீண்ட நேரமாக கார் நின்று கொண்டிருந்திருக்கிறது. விடுதியின் காவலாளி காருக்குள் ஒருவர் இருப்பதை பார்த்துவிட்டு நீண்ட நேரமாக கதவை தட்டி உள்ளார்.
ஆனால் அவர் எவ்வித அசைவும் இல்லாமல் இருந்ததால் உடனடியாக காவல்துறைக்கு அழைப்பு விடுவித்தனர். போலீசார் வந்து பார்த்தபோது உள்ளே இருப்பவர் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தது தெரிய வந்திருக்கிறது. இதனை அடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்று உள்ளனர்.
மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டார் எனும் தகவலை தெரிவித்துள்ளனர். இதன் பின்பு நடந்த விசாரணையில் தான் அவர் மலையாள பிரபல நடிகர் வினோத் தாமஸ் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இவர் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து காவல்துறை தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டு வருகிறது.