திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"தேவர் மகனுக்கு அடுத்த மாமன்னன் திரைப்படம் தான்" வடிவேலு கூறிய பதிலால் அதிர்ச்சியடைந்த பத்திரிக்கையாளர்கள்..
தமிழ் சினிமா உலகில் கவுண்டமணி, செந்திலுக்கு அடுத்த வடிவேலு தான் நகைச்சுவையில் மன்னனாக திகழ்ந்து வருகிறார். வடிவேலுவின் நகைச்சுவைக்காக பல திரைப்படங்கள் வெற்றியடைந்திருக்கின்றன.
மேலும் இவரின் கால் சீட்டுக்காக பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் காத்திருந்து திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்த கதை பல உண்டு. இவ்வாறு திரைத்துறையில் கொடி கட்டி பறந்துகொண்டு இருந்த காலத்தில் அரசியலில் இறங்கி தன் சினிமா வாழ்க்கையை அவரே அளித்துக் கொண்டார்.
இதன் பின்பு நீண்ட நாட்களாக படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேல் சமீபத்தில் கதாநாயகனாக எலி, நாய் சேகர் ரிட்டன்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்தார். திரைப்படங்கள் பெரும் தோல்வி அடைந்தன. தற்போது உதயநிதி நடிப்பில் வெளியாக இருக்கும் 'மாமன்னன்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய வடிவேலு தேவர் மகனுக்கு அடுத்த மாமன்னன் திரைப்படம் தான் என் வாழ்வில் முக்கியமான திரைப்படம் ஆகும் என்று கூறினார். தேவர்மகன் திரைப்படம் அதிக சர்ச்சையான திரைக்கதையை கொண்டது. அதேபோல் 'மாமன்னன்' திரைப்படத்தில் கதையும் இருக்கும் என்று பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டனர். இதை மறுத்த வடிவேலு 'மாமன்னன்' ஒரு சமூக நீதி திரைப்படம் என்று சமாளித்து பேசினார்.