குடும்பத்துடன் கொலை செய்திடுவேன் - பிரபல நடிகைக்கு கொலை மிரட்டல்.. காவல் நிலையத்தில் புகார்.!
ரசிகர்களே... ஏ.ஆர். ரஹ்மானின் நேரடி இசை நிகழ்ச்சி... பிரம்மாண்டமாக மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழா!
தமிழ் சினிமாவின் முன்னணியை இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் மாறி செல்வராஜ். பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து இவர் இயக்கும் திரைப்படம் மாமன்னன்.
இந்தத் திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடிக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் அவருடன் ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும் வடிவேலு ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தத் திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் இந்த மாதம் வெளியாக இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து இந்தி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் வைத்து இன்று நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்களும் திரைப்படக் கலைஞர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர். மேலும் இந்த நிகழ்வின்போது திரைப்படத்தின் பாடல்களை நேரலையில் இசைக்க இருக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான்.
இதனால் இந்த நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருக்கிறது. ஏற்கனவே இந்த திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை காணும் ஆவலில் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியோடு திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதி ஆகியவையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.