மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மம்மூட்டி, ஜோதிகா படத்திற்கு தடை.? காரணம் இது தான்.!
ஜோதிகா முதல் முறையாக மலையாளத்தில் அறிமுகமாகியுள்ள திரைப்படம் "காதல் தி கோர்". மம்மூட்டியின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை "தி கிரேட் இந்தியன் கிச்சன்" திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் ஜியோ பேபி இயக்கியுள்ளார்.
வரும் நவம்பர் 23ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தில், அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்ற ஜார்ஜ் என்ற கதாப்பாத்திரத்தில் மம்மூட்டியும், அவருடைய மனைவியாக ஓமணா என்ற கதாப்பாத்திரத்தில் ஜோதிகாவும் நடித்துள்ளனர். மேலும் இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில் திடீரென ஜார்ஜ் தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்கிறார். அதையடுத்து அவரது மனைவி ஓமணா விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடுகிறார். மேலும் அதில் ஜார்ஜ் சில ஆண்டுகளாக தங்கன் என்பவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வருகிறார் என்று குறிப்பிடுகிறார்.
முதன் முறையாக மம்மூட்டி இதில் தன்பாலின ஈர்ப்பாளராக நடித்துள்ளது ரசிகர்களையும், பல நடிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ஓரினச் சேர்க்கையாளர்களை ஆதரிக்கும் வகையில் இப்படம் உள்ளதால் அரபு நாடுகளில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.