ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
உண்மையாகவே சிம்பு ஷூட்டிங்கிற்கு லேட்டா வருகிறாரா .! மனம் திறந்த மாநாடு தயாரிப்பாளர்.!
சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றாலே அதுபற்றி பல்வேறு வதந்திகள், சர்ச்சைகள் வந்தவண்ணம் இருக்கும். பெரும்பாலான நேரங்களில் சிம்பு படப்பிடிப்பு தளத்திற்கு நேரத்திற்கு வருவது இல்லை, சரியாக ஒத்துழைப்பது இல்லை என்பதுதான் பொதுவான குற்றமாக இருக்கும்.
இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிவரும் மாநாடு படத்தில் சிம்பு தற்போது நடித்துவருகிறார். மாநாடு படப்பிடிப்பிற்கு 16-வது நாளிலிருந்தே சிம்பு தாமதமாக வருகிறார் என்றும் ஹைதராபாத்தில் நடக்கும் ஷூட்டிங்கிற்கு வர மறுத்துவிட்டார் என்றும் செய்திகள் வெளியாகின.
தற்போது இதுகுறித்து மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விளக்கமளித்துள்ளார். அதில், சிம்பு பற்றி உங்கள் மனதில் இருக்கும் கடந்த கால அனுபவங்களை அழித்துவிடுங்கள் என்றும், சினிமாவை நேசிக்கும் ஒரு நல்ல மனிதனாக எந்த ஒரு பிரச்சனையும் இன்றி சிம்பு படப்பிடிப்பிற்கு வந்து செல்கிறார் எனவும் கூறியுள்ளார்.