திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தமிழ்நாடு மற்றும் உலகம் முழுவதும் மாநாடு படம் படைத்த வசூல் மொத்தம் எவ்வளவு தெரியுமா..?
ஈஸ்வரன் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி கடந்த 25ஆம் தேதி பல தடைகளை தாண்டி வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் மாநாடு. இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஹீரோயினாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார் மற்றும் வில்லனாக எஸ்.ஜே சூர்யா அசத்தலாக நடித்திருந்தார்.
மேலும் இப்படத்தில் மனோஜ், பிரேம்ஜி, கருணாகரன், சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மாநாடு படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் வெளிவந்து விமர்சன ரீதியாக, வசூல் ரீதியாக பாராட்டையே பெற்று வருகிறது. இந்த நிலையில் இதுவரை மாநாடு படம் படைத்த வசூல் சாதனை குறித்து சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.
அதாவது மாநாடு படம் ரிலீஸாகி இரண்டே நாட்களில் 14 கோடி வசூல் சாதனை படைத்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. இந்நிலையில் இதுவரை உலகம் மற்றும் தமிழ்நாடு முழுவதும் மாநாடு படம் படைத்த வசூல் சாதனையின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் மட்டும் 52 கோடியும், உலகம் முழுவதும் 75+ கோடியும் வசூல் ஈட்டியுள்ளது.