மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குக் வித் கோமாளியிலிருந்து விலகிய கையோடு, மணிமேகலை சொன்ன குட் நியூஸ்.! அட..என்னனு பார்த்தீங்களா!!
ஆரம்பத்தில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான தொகுப்பாளினியாக இருந்தவர் மணிமேகலை. தனது கலகலப்பான பேச்சால் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றார். இந்த நிலையில் மணிமேகலை கடந்த 2017ஆம் ஆண்டு நடன இயக்குனரான காதர் ஹுசைன் என்பவரை காதலித்து, பெற்றோரை எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் விஜய் டிவியில் களமிறங்கிய அவர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துக் கொண்டு தனது சேட்டையால், கலகலப்பான செயல்களால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். இந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன் 4ல் கலந்து கொண்ட மணிமேகலை திடீரென அதிலிருந்து விலகுவதாக அண்மையில் அறிவித்தார்.
இந்நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பதால்தான் நிகழ்ச்சியில் இருந்து விலகினார் என தகவல்கள் பரவியது. இதற்கிடையில் மணிமேகலை ஹுசைனுடன் பூமிக்கு பூஜை போடும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, HM பண்ணை வீடு பாலக்கால் பூஜை, கடவுளின் அருளால், கடின உழைப்பால் எங்களது குட்டி சாம்ராஜ்யத்தை உருவாக்க தொடங்கியுள்ளோம், இனி கிராமத்திற்குச் செல்லும் போதெல்லாம் எங்கள் மகிழ்ச்சியான இடமாக அது இருக்கும். கனவு காணுங்கள் என கூறியுள்ளார்