மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்திலிருந்து வெளியேறிய முன்னணி நடிகர்! இதுதான் காரணமா!
தமிழ் சினிமாவில் மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், அஞ்சலி, தளபதி, ரோஜா என தொடங்கி சமீபத்தில் வெளிவந்த ஓகே கண்மணி, காற்று வெளியிடை போன்ற பல வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் மணிரத்னம் . இவர் அவரது படத்திற்காக ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் தற்போது இயக்குனர் மணிரத்னம் அவர்கள் பல பிரபலங்களை வைத்து பொன்னியின் செல்வன் என்ற புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்காக பாதி பிரபலங்கள் தேர்வாகியுள்ளார். இன்னும் ஒரு சில பிரபலங்களை தேடி வருகின்றனர்.
மேலும் இப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, அமிதாப் ஆகியோர் நடிக்கவுள்ளனர். மேலும் இந்த படத்தை இயக்குனர் மணிரத்னம் அவர்கள் 300 கோடி பட்ஜெட்டில் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தாய்லாந்தில் ஆரம்பமாக உள்ளது. அதற்கான பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் இப்படத்திற்காக நடிகர் பார்த்திபன் தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால் தற்போது திடீரென இப்படத்திலிருந்து விலகியுள்ளார். அதற்கு காரணம் தேதி பிரச்சனை என்று மட்டுமே கூறியுள்ளார். இதற்கு முன்பு நடிகை அமலாபால் இப்படத்திலிருந்து தேர்வாகி விலக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.