மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது.. AK61 படத்தில் அஜித்துக்கு ஜோடி இந்த 41 வயது பிரபல நடிகையா?? தீயாய் பரவும் தகவல்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தை தொடர்ந்து ஹெச். வினோத்துடன் மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைந்து உருவாகியுள்ள திரைப்படம் AK61. இந்த படத்தையும் போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும் AK61 படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் மிரட்டவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இறுதிக் கட்ட படப்பிடிப்பை படக்குழு புனேவில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஏகே 61 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கபோவது யார் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் தற்போது AK61 படத்தில் ஹீரோயினாக பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விரைவில் புனேவில் நடைபெறவுள்ள படப்பிடிப்பில் மஞ்சு வாரியர் கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.