மது கிடைக்காத விரக்தியில் பழம்பெரும் நடிகை மனோரமாவின் மகன் எடுத்த விபரீத முடிவு..!



manorammavi-son-attempted-to-suside-because-of-dirinks

சென்னை தி. நகர் நீலகண்ட மேத்தா தெருவில் வசித்து வருபவர் பழம்பெரும் நடிகை மனோரமாவின் மகன் பூபதி. இவர் கடுமையான மதுபழக்கத்திற்கு அடிமையானவர். இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸின் எதிரொலியால் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு விட்டன. அதில் மதுகடைகளும் அடங்கும். இதனால் பல குடிமகன்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

Manormma son

அதேபோல் தான் மனோரமாவின் மகன் பூபதியும் குடிபழக்கத்தில் அடிமையாகி தற்போது மது கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென நேற்று இரவு தூக்கத்திற்காக மாத்திரை எடுத்து கொண்ட போது மாத்திரையை அளவுக்கு அதிகமாக எடுத்து கொண்டுள்ளார்.

அதனை அடுத்து சில நொடிகளிலேயே பூபதிக்கு வலிப்பு ஏற்ப்பட்டுள்ளது. உடனே அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு அப்போலோ மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது அவர் சிகிச்சை பெற்று நலம் பெற்றுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.