மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking : திரிஷா பற்றி ஆபாச பேச்சு.. மன்சூர் அலிகான் மீது பாய்ந்த வழக்கு.!
நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில், நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் லியோ. இதில் பல்வேறு திரைப்படங்கள் நடித்த நிலையில் மன்சூர் அலிகான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் மன்சூர் அலிகான் திரிஷாவை கண்ணிலேயே காட்டாமல் விமானத்தில் அழைத்து சென்று விமானத்திலேயே கூட்டி வந்து விட்டனர் என்றும், அவருடன் நடிக்கலாம் என்று ஆசையில் இருந்தேன் அது நடக்கவில்லை என்றும் பேசி இருந்தார்.
தொடர்ந்து ஒரு youtube சேனலுக்கு பேட்டி அளித்த போது, "குஷ்பூ மற்றும் ரோஜா போன்ற நடிகைகளுடன் நடித்த போது பெட்ரூம் காட்சிகளில் அவர்களை கற்பழிப்பது போல வரும். அப்படிப்பட்ட நான் திரிஷாவுடன் பெட்ரூம் காட்சிகளில் நடிக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அது நடக்கவில்லை." என்று அருவருக்கத்தக்க வகையில் பேசியிருந்தார்.
இந்த விஷயம் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் திரிஷா மற்றும் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இது மிகவும் சர்ச்சையாகிய நிலையில் தற்போது நடிகர் மன்சூர் அலிகான் மீது காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.