மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ராஜாத்தி.. பசுவுக்கும், மன்சூருக்கும் இப்படி ஒரு பாசபந்தமா?.! வைரலாகும் வீடியோ..!!
கோலிவுட்டில் 90s காலகட்டங்களில் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து பயங்கரமாக மிரளவைத்தவர் மன்சூர் அலிகான். இவர் நடிகர் பிரபு நடிப்பில் வெளிவந்த "வேலை கிடைச்சிருச்சு" என்ற படத்தில் நடித்ததன் மூலமாக அறிமுகமானார். இதன்பின் அவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் கொடூர மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார்.
இவர் நடித்ததிலேயே கேப்டன் பிரபாகரன், சாமுண்டி, நாளைய தீர்ப்பு, மூன்றாவது கண் மற்றும் சுதேசி போன்ற படங்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதுவரையிலும் இவர் 250 படங்களுக்கும் மேல் நடித்துள்ள நிலையில், அரசியலிலும் களம் இறங்கினார்.
நடிகர் மற்றும் தயாரிப்பாளர் மன்சூர் அலிகான், தனது சென்னையிலுள்ள இல்லத்தில் மாடுகள் வளர்க்கிறார். அவர் மாட்டைக் குளிப்பாட்டும் வீடியோ.
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) August 5, 2022
PRO_கோவிந்தராஜ்@GovindarajPro #MansoorAlikhan pic.twitter.com/W8F67CFh2c
இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் மன்சூர் அலிகான் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் வளர்க்கும் மாட்டினை குளிப்பாட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் அந்த வீடியோவில், "நல்ல பொண்ணுள்ள நீ. வெயில் ரொம்ப அடிக்குது.
இனி அடிக்கடி நல்லா குளிக்கணும் என்று கூறி, குற்றால அருவியிலே குளிச்சது போல் இருக்கிறதா?, ஒருநாள் சுத்திட்டு வந்து ஜாலியாக குளிக்கிரியா?. ராஜாத்தி" என்று பாட்டு பாடிக்கொண்டு ஜாலியாக குளிப்பாட்டியுள்ளார்.