மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது.. மறுபடியுமா... கடும் கோபத்தில் தனுஷ் ரசிகர்கள்... என்ன காரணம் தெரியுமா.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் தனுஷ். இவர் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்து வருகிறார். தனுஷின் படங்களை தியேட்டரில் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது வெளியான புதிய அறிவிப்பு தனுஷ் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தில் ஏற்படுத்தியுள்ளது.
அதாவது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் மாறன் படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. மேலும் மாறன் திரைப்படத்திற்கு ட்விட்டரில் எமோஜி வெளியிட்டுள்ளனர். எமோஜியை பார்த்த தனுஷ் ரசிகர்கள் கடுப்பாகிவிட்டனர். இதற்கிடையே மாறன் ட்ரெய்லரை ரசகிர்களாகிய நீங்கள் தான் ரிலீஸ் செய்கிறீர்கள் என்று அறிவிப்பு வெளியிட்டனர்.
No corona
— Shiva Kannan (@ShivaKannan_) February 28, 2022
No occupancy issues
Hold the movie for longtime
Still Sold for direct Hotstar premiere@SathyaJyothi
Now releasing emoji ! #Maaran pic.twitter.com/RYWcucObIV
அதனை பார்த்த ரசிகர்கள் இப்போது கொரோனா இல்லை தியேட்டர்களும் மூடவில்லை இருப்பினும் மாறன் படம் ஓடிடியில் தான் வெளியாகுமா என தனுஷ் ரசிகர்கள் கடும் கொந்தளிப்பில் இருந்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி தனுஷ் ரசிகர்கள், நாங்கள் எமோஜி கேட்டோமா, படத்தை தியேட்டரில் வெளியிடுங்க சார் என கூறியுள்ளனர். மேலும் தயாரிப்பு நிறுவனத்தை கலாய்த்து மீம்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.