பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்கள்தான்? வெளியான தகவல்.!
விஜய் குரலில் வெளியானது ஒரு குட்டி கதை! செம உற்சாகத்தில் ரசிகர்கள்! வீடியோ இதோ!
பிகில் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளா.ர் மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார்.
மேலும் அவர்களுடன் சாந்தனு பாக்யராஜ், ஆண்ட்ரியா ஜெமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார. இந்நிலையில் இப்படத்தின் காட்சிகள் தற்போது நெய்வேலி பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் ஒரு குட்டி கதை முதல் சிங்கிள் டிராக் காதலர் தினத்தன்று வெளியாகும் என சோனி மியூசிக் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது., அதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்த நிலையில் அது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. குட்டி கதை பாடலை அனிருத் இசையமைக்க நடிகர் விஜய் பாடியுள்ளார்.