மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இசைஞானி இளையராஜாவின் பயோ பிக்-கில் பிரபல நடிகர்.! இயக்குனர் தகவல்.!
தமிழ் ரசிகர்களால் இசைஞானி என்று கொண்டாடப்படும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக இருக்கின்றது.
இந்த படத்தை பிரபல இயக்குனர் ஆர்.பால்கி இயக்க உள்ளதாகவும், இளையராஜா கேரக்டரில் நடிகர் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இயக்குனர் பால்கி முன்னதாக ஷமிதாப், பா, பேட்மேன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், "கடந்த சில வருடங்களாகவே முக்கிய பிரபலங்கள் பலரின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதே வரிசையில் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு.
இதுவரை இளையராஜா ஆயிரம் படங்களுக்கு மேல் மூன்று தலைமுறைகளாக இசையமைத்து வருகின்றார். இவர் பாடகராகவும், பாடல் ஆசிரியராகவும் இருக்கிறார். இந்த அற்புதமான திறமைகள் கொண்டவரின் வாழ்க்கையை படமாக எடுத்தால் அதில் தனுஷை தான் ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டும்.
ஏனென்றால் அவர் அப்படியே இளையராஜா போல இருக்கிறார். இந்த படத்தில் தனுஷை நடிக்க வைப்பது தான் இளையராஜாவுக்கு நான் கொடுக்கும் மிகச் சிறந்த பரிசு. காரணம் தனுஷும் என்னை போல இளையராஜாவின் தீவிர ரசிகர்." என்று தெரிவித்துள்ளார்.