மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரஜினிகாந்தால் அவதிப்படும் பொதுமக்கள்.. என்ன காரணம் தெரியுமா.?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் ஆரம்ப காலகட்டத்தில் பல கஷ்டங்களை சந்தித்தாலும் தற்போது சினிமாவில் தனக்கென தனி இடத்தை நிலை நாட்டியிருக்கிறார். தனது நடிப்பு திறமையின் மூலம் சூப்பர் ஸ்டார் எனும் அந்தஸ்தை பெற்று ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.
பல வெற்றி திரைப்படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக தற்போது வரை நிலைநாட்டி வருகிறார். தற்போது ரஜினிகாந்த், நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர்' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் தனது மகள் ஐஸ்வர்யா திரைப்படமான 'லால் சலாம்' கேமியோ ரோலில் நடித்துவருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் நடைபெற்று படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் பரபரப்பு கிளப்பின தற்போது 'லால் சலாம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டின் பல இடங்களில் நடந்து வருகிறது.
இதுபோன்ற நிலையில், 'லால் சலாம்' படப்பிடிப்பு நடத்தப்படும் இடங்களில் சாலைகள் மூடப்பட்டு வருவதால் பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மேலும் படப்பிடிப்பில் போலீசாரும் போதும் மக்களும் படப்பிடிப்பு தளத்தில் குவிந்து வருவதால் பல சிக்கலான சூழ்நிலைகள் நிகழ்ந்து வருகிறது என்று கூறப்பட்டு வருகின்றது.