#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இளமை துள்ளலோடு களத்தில் இறங்கிய நடிகை மீனா! செம உற்சாகத்தில் ரசிகர்கள்! வைரலாகும் புகைப்படம்!
தமிழ் சினிமாவில் பல மாபெரும் பிரபலங்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை மீனா. நெஞ்சங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் 1982 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழிப் படங்களில், பல நூறு திரைப் படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மீனா குழந்தை நட்சத்திரம் தொடங்கி ஜோடியாக வரை சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து தற்போது ஒரு சில சினிமாக்களில் துணைகதாபாத்திரங்களில் நடித்துவந்த மீனா தற்போது மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக தலைவர் 168 படத்தில் நடிக்கவுள்ளார்.
மேலும் தலைவர் 168 சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ரஜினி, மீனாவுடன் இணைந்து சூரி, குஷ்பூ, சதீஷ், பிரகாஷ்ராஜ் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியானது.
அதனை தொடர்ந்து மீனா இளமை துள்ளலோடு தான் தலைவர் 168 படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் செல்வதாக கூறி விமானத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
#Hyderabad calling #Thalaivar168 shoot #meena #thalaivar #rajinikanth @sunpictures @directorsiva pic.twitter.com/OcYHBDKE1B
— Meena (@ActressMeena_FP) December 21, 2019