மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மறைந்த கணவரை நினைத்து பேட்டியில் கண்கலங்கிய மீனா..
குழந்தை நட்சத்திரமாக இருந்து கதாநாயகியான நடிகைகளில் நாம் அனைவருக்கும் தெரிந்த பிரபலமான நடிகை மீனா அவர்கள். குழந்தை நட்சத்திரத்திலிருந்து கதாநாயகி வரை பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அவ்வாறு சிறு வயதிலேயே தன் நடிப்பில் தனித்துவம் காட்டி பின் தன் உழைப்பினாலும், விடாமுயற்சியினாலும் கதாநாயகியாக நிலைத்து நின்றார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் சில ஆண்டுகளுக்குப் பிறகு அவருடனே ஜோடியாக நடிக்கும் அளவுக்கு மீனா திறமைசாலி. 90sகளில் அப்படி கொடிகட்டி பறந்த சில ஹீரோயின்களில் மீனா மிக முக்கியமானவர். அஜித் ,விஜய், ரஜினி ,கமல் ,என பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார்.
அப்படி தன் புகழ் உச்சியில் இருக்கும் போது வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார். ஆனால் எதிர்பாராத விதமாக கடந்த ஆண்டு அவரது கணவர் இறந்து விட்டார்.
சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்கு இவர் அளித்த பேட்டியில் 90களில் இருந்தது போல் சினிமா துறை இப்ப இல்லை என்றும், 2000 ஆண்டுக்கு மேல் பல பழக்கங்கள் உருவாகியுள்ளதாகவும் கூறினார். அப்போதெல்லாம் தன் நண்பர்கள் பப்புக்கு செல்வார்கள். என்னையும் அழைப்பார்கள். ஆனால் என் அம்மா அதற்கெல்லாம் ஒருபோதும் ஒப்புக் கொண்டதில்லை எனவே நானும் பப்புக்கு செல்வதை மறுத்து விடுவேன் என்றும் கூறினார். மேலும் தன் திருமணத்திற்கு பிறகு தன் கணவர் எல்லா விஷயங்களிலும் உறுதுணையாக இருந்ததார்" என்று மனம் நெகிழ்ந்தார்.