மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ராமராஜனுக்கு ஜோடியாகும் மீனா... ரீ என்ட்ரி கொடுக்கும் எங்க ஊர் பாட்டுக்காரன்.!!
80களில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் ராமராஜன். இவரது படம் ரிலீஸ் ஆகிறது என்றால் ரஜினிகாந்த் கமல்ஹாசன் கூட பயப்படும் அளவிற்கு தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தியவர். இவரது நடிப்பில் உருவான கரகாட்டக்காரன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.
கிராமப்புற கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனதைக் கவர்ந்தார் இவர். தமிழ் சினிமாவில் ட்ரெண்ட் மாறியது இளம் கதாநாயகர்கள் மற்றும் இயக்குனர்களின் வருகை ஆகியவற்றால் இவரது மார்க்கெட் சரிவை சந்தித்தது. இதன் பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கியாவார் அரசியல் பக்கம் தனது பார்வையை செலுத்தினார்.
ஆனால் அரசியலிலும் நீண்ட காலமாக அவருக்கு எதிர்பார்த்து வெற்றி கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து மீண்டும் சினிமாவின் பக்கம் திரும்பி இருக்கிறார் ராமராஜன். ராகேஷ் என்பவரின் இயக்கத்தில் சாமானியன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து மேலும் ஒரு படத்திலும் நடிக்க உள்ளார் அவர்.
அறிமுக இயக்குனரான கார்த்திக் என்பவரது இயக்கத்தில் ராமராஜன் வழக்கறிஞராக நடிக்க புதிய திரைப்படத்தில் ஒப்பந்தமாக இருக்கிறார். அந்தத் திரைப்படத்திற்கு உத்தமன் என்று பேரிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க மீனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி இருக்கின்றன.