மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சேரனை விடுங்க, இவங்க 3 பேர் மட்டும் ஜெயிக்கவே கூடாது.! வெளியே வந்து கொந்தளித்த மீரா!!
பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.
மேலும் பிக்பாஸ் என்றாலே சர்ச்சைகளுக்கும் சண்டைகளுக்கும் எப்பொழுதுமே பஞ்சம் இருக்காது. அதேபோல பிக் பாஸ் சீசன் மூன்றிலும் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. மேலும் நாளுக்கு நாள் சண்டைகள் அதிகமாகிக்கொண்டே மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது.
இந்நிலையில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்துகொண்டவர் மிஸ். இந்தியா பட்டம் பெற்ற மீரா மிதுன். இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பே பல்வேறு சர்ச் சைகளை சந்தித்தார். மேலும் பிக்பாஸ் வீட்டினுள்ளும் சக போட்டியாளர்களிடம் அடிக்கடி சண்டை போட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தார்.
இந்நிலையில் மீரா கடந்த வாரம் இயக்குனர் சேரன் குறித்து தவறான அவதூறு ஒன்றை கூறி பெரும் பரபரப்பை கிளப்பினார்.அதனை தொடர்ந்து மீரா நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் வெளியே வந்த மீராவிடம் பேட்டி ஒன்றில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் வெல்லகூடாது என்று நினைக்கிறீர்கள் என கேட்டதற்கு கண்டிப்பாக சாக்க்ஷி அபிராமி,ஷெரின் வெற்றிபெறக்கூடாது.அனைவருமே மோசமானவர்கள் ஒவ்வொரு வாரமும் இவர்களால் நான் பல பிரச்சினைகளை சந்தித்தேன் என கூறியுள்ளார்.