மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பட வாய்ப்புக்காக கதறியழுத மீரா ஜாஸ்மின்.. என்ன படம் தெரியுமா.?
கேரளாவைச் சேர்ந்தவர் மீரா ஜாஸ்மின். இவர் தமிழில் மாதவனுடன் "ரன்" என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து இவர் முன்னணி நடிகர்களுடன் ஆஞ்சநேயா, புதிய கீதை, பாலா, ஜோடி, ஆயுத எழுத்து, சண்டக்கோழி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
ஆரம்ப காலங்கலில் வெற்றிப்படங்களைக் கொடுத்த மீரா ஜாஸ்மின், போகப்போக சரியான வாய்ப்புகள் அமையாமல் சினிமாவை விட்டு ஒதுங்கினார். இந்நிலையில், இவர் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டுக் கதறி அழுததாக ஒரு தகவலை இயக்குனர் லிங்குசாமி கூறியுள்ளார்.
லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான "சண்டக்கோழி" திரைப்படம் தான் அது. இந்தப்படத்தில் மீரா ஜாஸ்மின் தான் ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் இது ஒரு முக்கியமான படமாக அவருக்கு அமைந்தது.
ஆனால், இந்தப் படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தது வேறு நடிகையாம். ஒரு முறை லிங்குசாமியை சந்தித்த மீரா ஜாஸ்மின் இந்தப் படத்தின் கதையைக் கேட்டு தான் தான் இந்தப்படத்தில் நடிப்பேன் என்று கூறி கதறி அழுது இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றதாக லிங்குசாமி கூறியுள்ளார்.