#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிக்பாஸ்க்கு போனால் இப்படியா செய்வீங்க!! நம்ம வீட்டுப் பிள்ளையை தாறுமாறாக சீண்டிய மீரா மிதுன்!!
தமிழ் சினிமாவில் தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் மீரா மிதுன். மாடலிங் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், மிஸ் இந்தியா மிஸ் தமிழ்நாடு உட்பட பல அழகி பட்டங்களை பெற்றுள்ளார். மீரா மிதுன் தொடர்ந்து பல சர்ச்சையில் சிக்கி வருபவர்.
இந்நிலையில் மீரா மிதுன் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் பல பிரச்சினைகளை எழுப்பிய அவர் குறைந்த வாக்குகளை பெற்று போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
மீரா மிதுன் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் நடித்ததாக தகவல்கள் வெளிவந்தது. ஆனால் அவர் நடித்த காட்சிகள் அனைத்தும் பட குழுவால் நீக்கப்பட்டது.
இந்நிலையில் மீராமிதுன் மிகவும் ஆவேசமாக, நான் படத்திற்காக 10 நாட்கள் கடுமையான வெயிலில் கடிகாரம் போல சுழன்று வேலை பார்த்தேன். ஆனால் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் படத்தில் நான் நடித்த காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டதாக சன் பிக்சர் நிறுவனம் மற்றும் இயக்குனர் பாண்டியராஜ் தெரிவித்தனர். மேலும் கோலிவுட்டில் ஆரோக்கியமான போட்டியில்லாதது கவலை அளிக்கிறது. சிவகார்த்திகேயன் கூட விஜய் டிவியில் இருந்து வந்தவர்தான். என தெரிவித்துள்ளார்.