53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
குட் நைட் பட அனு பேஸ்புக் மன்மதனின் முன்னால் காதலியா.? வைரலாகும் ஷாக் தகவல்.!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வளர்ந்து வருபவர் மீதா ரகுநாத். இவர் முதன் முதலில் 'முதல் நீ முடிவும் நீ' எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்திற்கு பின்பு 'குட் நைட்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
மேலும் இப்படத்திற்கு பின்பு வேறு எந்த திரைப்படங்களிலும் நடிக்க கமிட்டாகாமல் இருந்தார் மீதா ரகுநாத். இதனை அடுத்து இவரின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்கள் வாழ்த்து கூறி வந்தனர்.
இது போன்ற நிலையில், பேஸ்புக்கில் தினேஷ் மாதவன் எனும் நபர் மீதா ரகுநாத் அவரின் முன்னாள் காதலி என்று கூறி கமெண்ட் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் மீதா ரகுநாத்தின் வருங்கால கணவரின் புகைப்படத்தை பதிவிட்டு உருவக் கேலியும் செய்து வருகிறார்.
மேலும் பேஸ்புக் மன்மதனாக வலம் வரும் தினேஷ் மாதவன் என்பவர் பல பெண்களின் புகைப்படங்களை பதிவிட்டு தன்னுடன் படுக்கையறைக்கு வந்தவர் என்று கூறி பல போஸ்ட்களை பதிவிட்டுள்ளார். இதன்படி மீதா ரகுநாத் ஒரு நடிகை என்பது தெரியாமல் தன்னுடைய முன்னாள் காதலி என்று குறிப்பிட்ட கமெண்ட் செய்திருப்பது இணையத்தில் வைரலாகி வந்தது. இப்பதிவை பார்த்து மீதா ரகுநாத் ரசிகர்களும் அதிர்ச்சியில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி அடிக்கடி பெண்கள் குறித்து அவதூறாக போஸ்ட் செய்தும், கமெண்ட்டுகள் பதிவிட்டும் தன்னை ஒரு பிளேபாயாக காட்டிக் கொண்டு வந்த தினேஷ், இதுபோல நிறைய கதைகளை கட்டவிழ்த்து விட்டு பேஸ்புக் பெண்களை கவர முயற்சி செய்வார். அப்போது அதை பலரும் உண்மை என்று நம்புவதும் உண்டு. இந்த செயலின் மூலமாக தினேஷின் பித்தலாட்டங்கள் வெளிவரத் துவங்கி உள்ளன.