மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தளபதி படத்திற்கு பகிரங்க சவால் விட்ட மீசை ராஜேந்திரன்... கோலிவுடில் பரபரப்பு.!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஜெய்லர் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.
இதுவரை 600 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. வருகின்ற அக்டோபர் மாதம் இந்த திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இந்தத் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே 434 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன .
இதனால் லியோ திரைப்படத்தின் வசூல் ஜெயிலர் திரைப்படத்தின் சாதனையை கண்டிப்பாக முறியடிக்கும் என அத்தனை துறையினரும் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் தமிழ் சினிமா வரலாற்றில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை தொட்ட மிகப்பெரிய சாதனை படைக்கும் எனவும் லியோ திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்புகள் இருக்கிறது .
இந்நிலையில் தமிழ் சினிமாவில் வில்லன் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் மீசை ராஜேந்திரன் ஜெயிலர் திரைப்படத்தின் வசூலை எந்த திரைப்படத்தாலும் நெருங்க முடியாது என தெரிவித்திருக்கிறார். ஒருவேளை லியோ திரைப்படத்தின் வசூல் ஜெயிலர் வசூலை தாண்டினால் தன்னுடைய மீசையை எடுத்து விடுவதாகவும் பகிரங்கமாக சவால் விட்டு இருக்கிறார். இதுதான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாக் ஆக உள்ளது.