53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
சர்வதேச பட விழாவில் ‘மெர்சல்’; ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு!!
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான மெர்சல் திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று மாபெரும் வெற்றியடைந்தது.
இதில் ஆளும் பாஜகவை எதிர்த்து வந்த வசனங்களுக்கு பல தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட எதிர்ப்பு படத்திற்கு கூடுதல் விளம்பரமாய் மாறிப் போனது. இதனால் படம் எதிர்பார்த்ததை விட அதிக வசூலை குவித்தது. இதன்படி இப்படத்தின் வசூல் ரூ.200 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் இடம்பெற்ற பாடலாசிரியர் விவேக் எழுதிய “ஆளப்போறான் தமிழன்” பாடல் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றது.
உலகளவில் ஈர்த்ததால் உலக திரைப்பட விழாக்களில் ‘மெர்சல்’ படம் திரையிடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தென்கொரியாவில் உள்ள புச்சியான் நகரில், புச்சியான் சர்வதேச திரைப்பட விழா நடந்தது. இதில் ஆசியாவின் சிறந்த படங்களில் ஒன்றாக 'மெர்சல்' படத்தையும் தேர்வு செய்து திரையிட்டனர். படத்தை பார்த்தவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
மேலும் வரும் செப்டம்பர் 22ம் தேதி லண்டனில் நடைப்பெற உள்ள ஐஏஆர்ஏ விருதுக்கு மெர்சல் படம் பரிந்துரைக்கப்பட்டதால், அதில் நடித்த விஜய்யின் பெயர் ஹாலிவுட் நடிகர்களின் பட்டியலில் இடம்பெற்று அசத்தினார்.