மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மீண்டும் சன் டீவியில் ஒளிபரப்பாகிறது மெட்டி ஒலி சீரியல்.! மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!
சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பலநாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் உயிர் இழப்புகளும் அதிகரித்துவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அணைத்து நாடுகளும் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளன.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக அணைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில், சினிமா துறையும் ஓன்று. கொரோனா காரணமாக அணைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பல்வேறு முன்னணி சீரியல்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சீரியல்கள் ஒளிபரப்பான நேரங்களில் சன் தொலைக்காட்சியில் திரைப்படங்கள் ஒளிபரப்பாகிவருகிறது. இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக, ஏற்கனவே ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றிபெற்ற தொடர்களை மீண்டும் ஒளிபரப்ப உள்ளது சன் டிவி.
அந்த வகையில், இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில், 811 நாட்கள் ஓடி மாபெரும் வெற்றிபெற்ற மெட்டி ஒலி தொடரை நாளை முதல் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்புகிறது சன் டிவி. மெட்டி ஒலி தொடர் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல, ரம்யாகிருஷ்ணன் நடித்த தங்கம் தொடரும் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளது.