#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மெட்டிஒலி சீரியல் நடிகை காவேரியா இது.. வெளியான புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி.!
1990ம் ஆண்டு "வைகாசி பொறந்தாச்சு" திரைப்படத்தில் அறிமுகமானவர் காவேரி. இதில் பிரஷாந்திற்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார். இதன் பிறகு பந்தயக் குதிரை, போக்கிரி ராஜா, உன்னால் தான் நான் வாழ்கிறேன், சேதுபதி ஐ பி எஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
இதையடுத்து வாய்ப்பு இல்லாமல் சின்னத்திரை பக்கம் வந்த காவேரி, சன்டிவியில் ஒளிபரப்பான "மெட்டி ஒளி" தொடரில் தனம் கேரக்டரில் நடித்திருந்தார். இந்தத் தொடர் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில், காவேரி தொடர்ந்து தங்கம், அரசி, மீரா, கொடிமுல்லை, வம்சம் உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார்.
இதையடுத்து நடிப்பதை விட்டு விலகியிருந்த காவேரி, சமீபத்தில் ஒரு பேட்டியளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது, "வம்சம் தொடரில் நடித்துக்கொண்டிருந்த போது என் அம்மா இறந்துவிட்டதால் மிகவும் உடைந்து விட்டேன். அந்த நேரத்தில் தான் எனக்கு திருமணம் ஆனது.
எனவே நடிப்பதை விட்டு ஒதுங்கியிருந்தேன். எனக்கு தைராய்டு பிரச்சனை வந்தது. அப்போது உடல் எடை கூடிவிட்டது. தற்போது 8 கிலோ வரை எடை குறைத்துவிட்டேன். இப்போது மீண்டும் நடிக்க ஆசையாக உள்ளது. சினிமாவில் தான் நடிக்க விரும்புகிறேன்" என்று காவேரி கூறியுள்ளார்.