மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திடீரென பாலாறாக மாறிய ஆறு! இதற்கு பின் இப்படியொரு அதிர்ச்சி உண்மையா? வியப்பூட்டும் வீடியோ!!
இங்கிலாந்தில் பால் ஏற்றிவந்த டேங்கர் லாரி ஒன்று ஆற்றுக்குள் கவிழ்ந்த நிலையில் பால் அனைத்தும் ஆற்றில் கலந்து பாலாறாக மாறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்தின் தென்கிழக்கு வேல்ஸ் நகரில் உள்ள கார்மர்தென்ச்ரிங் என்ற பகுதியில் டுலைஸ் என்ற ஆறு அமைந்துள்ளது. இந்நிலையில், கார்மர்தென்ச்ரிங் பகுதியில் உள்ள சாலையில் அண்மையில் பால் ஏற்றிகொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்றுகொண்டு இருந்துள்ளது.
When a milk tanker overturns in the river #llanwrda #wales #milk pic.twitter.com/vnyhr5FXBi
— May 🏴 (@MayLewis19) April 14, 2021
அப்பொழுது எதிர்பாராத விதமாக அந்த லாரி விபத்துக்குள்ளாகி, நிலை தடுமாறி ஆற்றுக்குள் கவிழ்ந்தது. இந்நிலையில் டேங்கர் லாரியில் உள்ள கிட்டத்தட்ட 28 ஆயிரம் லிட்டர் பால் ஆற்று நீரில் கலந்தது. இதனால் டுலைஸ் ஆறு முழுவதும் வெள்ளை நிறமாக மாறி பால் ஆறாக காட்சி தந்தது.
மேலும் அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவருக்கு எந்த ஆபத்தும் நேரவில்லை. பின்னர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு டேங்கர் லாரியும் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது. இந்த நிலையில் டேங்கர் லாரியில் உள்ள பால் ஆற்றில் கலந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது பெருமளவில் வைரலாகி வருகிறது.